லீக்கானது AK62 ஒன்லைஸ்டோரி? தலைவருக்கு கதை சொல்றதுக்கு தல கிட்ட போய்ட்டியே விக்கி..

ajithkumar boneykapoor vigneshshivan AK62
By Edward Mar 26, 2022 08:15 AM GMT
Report

நடிகர் அஜித்குமார் வலிமை படத்திற்கு பிறகு சில வாரங்களில் அடுத்த படமான ஏகே 61 படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளார். எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளனர்.

இதைதொடர்ந்து அஜித்தின் ஏகே62 படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என்ற செய்து அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி இணையத்தில் லீக்காகியுள்ளது.

திருநெல்வேலியை சம்பந்தப்பட்ட கதையாக இருக்கும் இப்படத்தில் அஜித் கிராமத்துக்கே சாப்பாடு போடும் ஒரு பெரிய குடும்பம். அதில் அஜித் விவசாயன் செய்து விதைகளை ஆராய்ச்சி செய்யும் பணியை செய்கிறார்.

தரமான சாப்பாட்டினை கொடுத்து பல கிளைகளை ஆரம்பிக்கிறார். இதை தடுக்க பொறாமைப்படும் பன்னாட்டு நிறுவனம் அவர்களின் வியாபாரத்தை அழிக்க சதி செய்கிறது. இதனால் அவரது குடும்பமே ஒரி வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.

அதில் குடும்பம் எப்படி முன்னேறும் அஜித் இதற்கு என்ன செய்வார் என்று தான் கதையாக அமைகிறதாம். இந்த கதையை கொஞ்சம் இடையில் மாற்றி அமைக்கவும் உள்ளார்களாம்.

ஆனால், இந்த கதையை விக்னேஷ் சிவன் அஜித்திடம் இன்னும் கூறவே இல்லை. அப்படியிருக்கையில் படத்தின் கதை எப்படி இப்படியிருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் இந்த கதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி தி பாஸ் படமா என்று கிண்டலும் செய்து வருகிறார்கள்.