அகண்டா 2 எப்படா முடியும்ன்னு இருந்துச்சு!! ப்ளூ சட்டை மாறன் இப்படி சொல்லிட்டாரே..
அகண்டா 2
இயக்குநர் போயபதி சீனு இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் நடிப்பில் நேற்று டிசம்பர் 12 ஆம் தேதி ரிலீஸான படம் தான் அகண்டா 2. கடந்த வாரம் ரிலீஸாகாமல் தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பலரும் படத்தை பார்த்து விமர்சனம் செய்து வரும் நிலையில், சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தன்னுடைய பங்கிற்கு அகண்டா 2 படம் எப்படி இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.
ப்ளு சட்டை மாறன்
அதில், ஒரு படத்தில் கதை நன்றாக இருந்தால் திரைக்கதையில் கோட்டை விட்டுவிடுவார்கள். ஆனால், வசனத்தால் கோட்டைவிட்ட திரைப்படம் என்றால் இந்த படத்தை சொல்லலாம். ஏனென்றால் கதைப்படி இந்திய மக்கள் அனைவரையும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக சீனா மாற்றிவிடுகிறது.
கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையை கொண்டு வரும் பொறுப்பு படத்தின் ஹீரோ பாலைய்யாவுக்கு இருக்க, கடவுள் நம்பிக்கையை பாலைய்யா வசனத்தின் மூலமாக சொல்கிறார்.

கடவுள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை, அவரை நாங்கள் ஏன் நம்ப வேண்டும் என்று கேட்க, அதற்குகடவுள் இருக்கிறார் என்று ஆணித்தரமாக ஒரு விஷயத்தை சொல்லாமல் மேம்போக்கு தனமான வசனத்தை பேசியிருக்கிறார் பாலைய்யா.
மொத்த சீன ராணுவமும் பீரங்கி குண்டுகளை வைத்து பாலையா மீது தாக்குதல் நடத்துவார்கள். ஆனால் கையில் ஒரு சூலாயுதத்தை வைத்து அவை எல்லாத்தையும் தடுத்துவிடுவார். அதுமட்டுமின்றி சீன சுவரை உடைத்துக்கொண்டு பீரங்கி மீது சூலாயுதத்துடன் வரும் காட்சி என பல காட்சிகள் பார்க்க குபீர் சிரிப்பை வர வைத்தது. அகண்டா முதல் பாகத்தை பார்த்தால், அடுத்த என்ன நடக்கும் என சுவாரசியத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும், ஆனால் அகண்டா 2 எப்படா முடியும் என்று நினைக்கத் தோன்றுகிறது என்று ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.