பேருக்கு தான் சூப்பர் ஸ்டார் நடிகர்? தயாரிப்பாளருக்கு 200 கோடிக்கு பட்ஜெட்டுக்கு நாமம் போட்ட நடிகர்..
பாலிவுட் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் படம் வந்தாலே போதும் முதல் நாள் வசூலே படத்தின் பட்ஜெட்டை பெற்று வசூல் சாதனை படைக்கும். அப்படியொரு சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அக்ஷய் குமார்.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருக்கும் அக்ஷய் நடிப்பில் உருவான படம் சாம்ராட் பிருத்விராஜ். மன்னர் சாம்ராட் பிருத்விராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு சுமார் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகியது. இப்படம் வெளியாகிய முதல் நாள் மட்டுமே 10.70 கோடி வசூலித்தது. தற்போது படம் வெளியாகி ஒரு வாரமாகியுள்ள நிலையில் மொத்தமே இப்படம் 55.05 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
பாலிவுட் படங்களில் சூப்பர் ஸ்டார் நடிகர்களின் வசூல் சாதனையில் அக்ஷய் குமார் நடித்த இப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது முதல் முறையாம். விக்ரம், மேஜர் போன்ற படங்களில் நல்ல வரவேற்பு தான் இப்படத்தின் தோல்விக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இப்படத்தினை போன்று நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான தாகத் படம் 90கோடி பட்ஜெட்டில் 3 கோடிக்கு மேல் தான் வசூல் செய்துள்ளதாம்.
இப்படங்களில் 83 படம் 260 கோடி பட்ஜெட்டில் 193.73 கோடி வசூலும், தங்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் 335 கோடி பட்ஜெட்டில் 322 கோடியும் வசூலும், ஹீரோ படம் 191 கோடி பட்ஜெட்டில் 90 கோடி வசூலும் பெற்று லாபம் கூட பாக்காமல் இருந்துள்ளது.
#SamratPrithviraj is rejected... The heavy budget on one hand and the poor outcome on the other, has sent shock waves within the industry... Fri 10.70 cr, Sat 12.60 cr, Sun 16.10 cr, Mon 5 cr, Tue 4.25 cr, Wed 3.60 cr, Thu 2.80 cr. Total: ₹ 55.05 cr. #India biz. pic.twitter.com/3z94DzBlqi
— taran adarsh (@taran_adarsh) June 10, 2022