திரிஷாவால் தான் என் மனைவி என்னை விட்டு போய்ட்டாங்களா!! சர்ச்சையை ஏற்படுத்திய AL சூர்யா

Nayanthara Trisha Gossip Today
By Edward May 27, 2023 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஜோடி படத்தில் சிறு ரோலில் நடித்து சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை பெற்று தமிழில் மெளனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அதன்பின், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்தார்.

இதற்கிடையில் காதல் சர்ச்சை, தொழிலதிபருடன் திருமணம் வரை சென்று நின்று போன சம்பவம் போன்றவற்றால் மார்க்கெட்டை இழந்து வந்தார். தற்போது மீண்டும் தன் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தி பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

திரிஷாவால் தான் என் மனைவி என்னை விட்டு போய்ட்டாங்களா!! சர்ச்சையை ஏற்படுத்திய AL சூர்யா | Al Suriya Decide Trisha Nayanthara Trolls Viral

லியோ, பொன்னியின் செல்வன் 2 போன்ற படங்களின் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறார் திரிஷா. இப்படியொரு சூழலில் திரிஷா என் பொண்டாட்டி என்றும் நவம்பர் மாதம் எங்களுக்கு கல்யாணம் என்று ஏ எல் சூர்யா என்பவரை பேசி வருவது சர்ச்சையை கிளப்பி வருகிறது. மேலும் விக்ரம், விஜய் மற்றும் பல நடிகர்களை கண்டபடி கெட்டவார்த்தைகளால் திட்டியும் வருகிறார்.

மேலும் பப்ளிசிட்டிக்காக கண்டபடி பேசி வரும் ஏ எல் சூர்யா சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளது சர்ச்சையாகியுள்ளது. எனக்கு ஏற்கனவே திருமணமாகி இரு மகன்கள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

திரிஷாவால் தான் என் மனைவி என்னை விட்டு போய்ட்டாங்களா!! சர்ச்சையை ஏற்படுத்திய AL சூர்யா | Al Suriya Decide Trisha Nayanthara Trolls Viral

ஆனால் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டேன். திரிஷாவின் கணவர் நான் தான் என்று கூறியபோது உங்கள் மனைவி எதுவும் சொல்லவில்லையா என்ற கேள்விக்கு, 2 வருடங்களுக்கு முன் என் மனைவியை பிரிந்துவிட்டேன். திரிஷாவை பற்றி பேசுவது என் குடும்பத்திற்கு பிடிக்காது.

என் மனைவியை பிரிய திரிஷா காரணமில்லை என்றும் தெரிவித்துள்ளார். திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் சில விசயங்கள் ஒத்துவரவில்லை என்றும் என் அப்பாவே இதுபற்றி கேட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

2033ல் திரிஷா CM ஆகுவார் என்று கூறினேன், திரிஷாவுக்கு விருப்பம் இல்லைன்னா நயன் தாரா, திரிஷா இல்லன்னா நயன் தாரா என்று கூறியிருக்கிறார் ஏ எல் சூர்யா.