Driver-க்கு மிகப்பெரிய தொகை கொடுத்த நடிகை ஆலியா பட்.. காரணம் என்ன தெரியுமா
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார். இவர்கள் மும்பையில் ரூ. 250 கோடி செலவில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளனர். விரைவில் அதில் குடியேறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகில் உள்ள நட்சத்திரங்கள் தங்களது பணியாளர்களுக்கு இடம் வாங்கி வீடு கட்டி கொடுப்பது, கார் வாங்கி தருவது. அவர்களின் பிள்ளைகளின் படிப்பு செலவை பார்த்து கொள்வது என பல உதவிகளை செய்வார்கள்.
இந்த நிலையில், நடிகை ஆலியா பட் தனது வீட்டு பணியாளர் மற்றும் கார் Driver என இருவருக்கும் செய்திருக்கும் மிகப்பெரிய உதவி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. வீட்டின் பணியாளர் மற்றும் கார் Driver இருவருக்கும் தலா ரூ. 50 லட்சம் கொடுத்து வீடு வாங்கி கொள்ள கூறியுள்ளார் நடிகை ஆலியா பட்.
அவர்களும் மும்பையில் உள்ள முக்கிய இடத்தில் தற்போது வீடு வாங்க இருக்கிறார்கள். இந்த தகவல் வெளியாகி வைரலாக, பலரும் ஆலியா பட்டை பாராட்டி வருகிறார்கள். சிலர் ஆச்சர்யம் அடைந்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.