ரன்பீருடனான ரகசியங்களை மறைக்கும் நடிகை ஆலியா பட்.. எல்லாம் அதுக்குத்தானா

ranbir kapoor alia bhatt
By Kathick Mar 02, 2022 03:25 PM GMT
Report

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை ஆலியா பட், சமீபத்தில் கங்குபாய் எனும் படத்தில் நடித்திருந்தார். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்தை, பார்த்துவிட்டு அனைவரும் சிறந்த விமர்சனத்தை கூறி வருகிறார்கள்.

மேலும், இப்படம் இதுவரை ரூ. 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடிகை ஆலியா பட்-டிடம் உங்களுக்கும் ரன்பீர் கபூருக்கும் எப்போது திருமணம் என்ற கேள்வி கேட்டகப்பட்டது.

இதற்கு பதிலளித்த நடிகை ஆலியா பட் "பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்களை காப்பாற்றுவது கஷ்டமாக இருக்கிறது. எனக்கு எப்போது திருமணம் என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள தேவையில்லை". 

மேலும் "நான் யாருடன் மதிய உணவு சாப்பிடுகிறேன் என்பதை யாரிடமும் சொல்ல வேண்டியதில்லை. இதைவிட உங்களுக்கு முக்கியமான வேலைகள் இருக்கிறது. அதை பாருங்கள்" என்று கடுப்பாக பேசியுள்ளார்.