தோழியுடன் கார் பந்தயத்தில் தோற்றுப்போன நடிகர் அஜித்குமார்.. குட்டையை குழப்பிய அலிஷா அப்துல்லா..

Ajith Kumar Gossip Today
By Edward Oct 13, 2022 03:50 PM GMT
Report

பைக் ரேஸ்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார் தற்போது துணிவு படத்தின் ஷூட்டிங்கினை முடித்துவிட்டு தாய்லாந்து பைக் ரைடினை ஆரம்பித்துள்ளார். ஏற்கனவே பல மாதங்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பைக் பயணத்தை மேற்கொண்டு சர்ச்சையில் சிக்கினாலும் துணிவு படத்தினை முழுவதுமாக முடித்துக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அஜித் சிறுவயதில் இருந்தே கார் மற்றும் பைக் ரேசில் ஆர்வம் கொண்டவர். அப்படி அவருடன் நட்பாக பழகியவர்கள் கூட அஜித்தினை பற்றி பெருமையாக பேசவும் அவரது பைக் ரேஸ் பற்றியும் பகிர்ந்து வருவார்கள். அந்தவகையில், அஜித்குமார் நீண்ட நாள் பைக் ரேஸ் தோழியாக இருந்து வந்தவர் அலிஷா அப்துல்லா.

தோழியுடன் கார் பந்தயத்தில் தோற்றுப்போன நடிகர் அஜித்குமார்.. குட்டையை குழப்பிய அலிஷா அப்துல்லா.. | Alisha Abdulllah Talk About Ajith Race Lost

அலிஷா அப்துல்லா

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சார் பெஸ்ட் ஆனால் நான் தான் வெற்றி பெருவேன், அஜித் தோல்வி அடைவார் என்றும் அஜித்திற்கு கீர் பிடிக்க நான் தான் கற்றுக்கொடுத்தேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் அலிஷா பிரபலமாவதற்கு 9 வருடத்திற்கு முன் அஜித் தான் எனக்கு எல்லாமே கற்றுக்கொடுத்தது. அவர் எனக்கு காட் ஃபாதர் அஜித் தான், அவருக்கு நன்றி என்று கூறியிருந்தார். அஜித் வெற்றி பெறவில்லை என்று அவரது கூறிய சமீபத்தில் பேட்டி வீடியோவை வைத்து நெட்டிசன்கள் மற்றும் அஜித்தின் ரசிகர்கள் அலிஷாவை கலாய்த்தும் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.