பிக்பாஸ் சீசன் 10 : தி காமென் மேன் ஷோ பற்றிய முழு விவரம்..
பிக்பாஸ் சீசன் 10
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். கடந்த ஆண்டு சீசன் 9ல் திவ்யா கணேசன் டைட்டிலை கைப்பற்றிய நிலையில், விரைவில் பிக்பாஸ் தமிழ் 10 சீசன் தொடங்கவுள்ளது.
இந்த சீசனையும் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்கப்போகிறார் என்ற பிரமோ வீடியோவும் வெளியானது. என்னதான் கடந்த சீசன்களில் பிரபலங்கள் கலந்து கொண்டாலும், சீசன் 10ல் சாமானிய மக்களும் கலந்து கொள்ள காமன் மேன் என்ற ஆப்ஷனை வைத்து அதற்கான ஆடிஷனையும் நடத்தவுள்ளனர்.

தி காமென் மேன்
தி காமன் மேன் என்பது பிக் பாஸ் உலகத்தில் முத்திரை பதிக்கும் வகையில் தனித்துவமான ஆளுமையும், திறமையும் கொண்ட சாதாரண எளிய மக்களை கண்டறிய உருவாக்கப்பட்ட சிறப்பு தொடர். இந்நிகழ்ச்சியை முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஓவிய, ராஜு ஜெயமோகன், ஆரி அர்ஜுனன் போன்றவர்கள் நடுவராகவும் மாயா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவும் இருக்கிறார்.
தி காமன் மேன் நிகழ்ச்சியில் போட்டியிட்டு தேர்வு செய்யப்படும் வெற்றியாளர் அல்லது வெற்றியாளர்கள் பிக்பாஸ் சீசன் 10ல் நுழையும் வாய்ப்பை பெறுவார்கள். இந்நிகழ்ச்சிக்காக சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் ஒரு பிரத்யேக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

முக்கியமாக இது பிக்பாஸ் சீசன் 10க்கான பிரதான வீடு அல்ல, இந்த புதிய வடிவத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தனித்தனி அரங்கமாகும். இது பங்கேற்பாளர்களை தொடர்ந்து அடைத்து வைக்கும் வடிவம் அல்ல என்பதால், போட்டியாளர்கள், ஷூட்டிங், சவால்களுக்காக அரங்கிற்கு வந்துவிட்டு, தங்களின் பங்களிப்பு முடிந்ததும் வெளியேறலாம்.
போட்டியாளர்கள் தங்களின் ஆளுமை, தனித்திறமை, பார்வையாளர்களை மகிழ்விக்கும் திறன் போன்றவற்றி சோதிக்கும் வகையில் வடிவமைத்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும். தனித்துவனமான தங்களின் உடையாடல்கள் முதல் பல சவால்கள் வரை, பிக்பாஸ் வீட்டிற்குள் தங்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நிருபிக்க வேண்டும். அவர்களின் செயல்களை நடுவர்கள் மதிப்பீடு செய்வார்கள்.
இந்நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்றால் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வரும் ஆகஸ் 16 ஆம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார், விஜய் டிவியில் தினசரி புதி எபிசோட்டுகளுடன் ஒளிபரப்பாகவுள்ளது.