திருடுபோன நடிகையின் பாஸ்போர்ட்!! நடிகை விந்தியாவுக்கு விஜயகாந்த் செய்த செயல்..
கேப்டன் விஜயகாந்த்
கேப்டன், புரட்சி கலைஞர் என தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடப்பட்டவர் தான் விஜயகாந்த். 100 படங்களுக்கும் மேல் நடித்து தனக்கென தனி இடத்தை வைத்திருந்தார். நடிகராக மட்டுமில்லாமல் நடிகர் சங்க தலைவாகவும் தேமுதிக தலைவராக இருந்துள்ளார் கேப்டன். அவருடன் பயணித்த பல பிரபலங்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வருவார்கள்.
அந்தவகையில், நடிகை விந்தியா அளித்த பேட்டியொன்றில் விஜயகாந்த் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், வெளிநாட்டில் நடந்த கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு என்னையும் அழைத்ததார்கள்.

ஆனால் நான் வரமுடியாது என்று சொல்லிவிட்டேன். அப்போது விஜயகாந்த்தான் நடிகர் சங்க தலைவராக இருந்தார். அவர் எனக்கு ஃபோன் செய்து நீ ஏன் வரவில்லை என்று கேட்டார். உடனே நான், என்னிடம் பாஸ்போர்ட் இல்லை, சமீபத்தில் யாரோ திருடிவிட்டார்கள் என்று கூறினேன்.
உடனே அவர், விந்தியா இல்லாமல் எப்படி ஷோ நடத்த முடியும் என்று கேட்டுவிட்டு, நெப்போலியனையும் அழைத்துக்கொண்டு சாஸ்திரி பவன் சென்றார். ஒரே நாளில் ஃபார்ம், ஆவணங்கள் எல்லாம் ரெடி செய்து பாஸ்போர்ட்டையே வாங்கி கொடுத்துவிட்டார்.
பின் நானும் அந்ந்நிகழ்ச்சிக்கு போனேன். அதனை விஜயகாந்த் தான் முன் நின்று தட்டி கொடுத்தார். அந்த உதவியை எப்போதும் என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார் விந்தியா.