திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்தா!! விக்னேஷ் சிவனால் நடிகை நயன்தாரா எடுத்த முடிவு?
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. நானும் ரவுடி தான் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த நயன் தாரா, அவரை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் நெருக்கமாகவும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை கடந்த 7 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்.

பிரச்சனைக்கு மேல் பிரச்சனை
அதன்பின் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் தங்கள் அன்பை புகைப்படங்கள் வாயிலாக தெரிவித்து வந்தனர். திருமணம் முடிந்து 4 மாதமாகிப்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தனர்.
இந்த விசயம் மிகப்பெரியளவில் பேசப்பட்டது. திருமணமானது முதல் தற்போது வரை நயன்தாரா அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வருகிறாராம். அதாவது, இரட்டை குழந்தை பெற்றது, கோவிலுக்கு காலணியோடு சென்றது, திருமணத்தில் தோஷம், மாங்கல்ய தோஷம், விக்னேஷ் சிவன் அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்டது, நயன் தாராவின் தொடர் தோல்வி படங்கள் என்று அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வந்தார் நயன்.

அதுமட்டுமில்லாமல் இரு படங்களுக்கு 20 கோடி சம்பளமாக பேசப்பட்ட நிலையில் அதுவும் கைநழுவி போனது என்று அடிமேல் அடிவாங்கி வந்தார். இதன் விரக்தியில் நயன் தாரா ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.
இனிமேல் நடிக்க போவதில்லை என்றும் படங்களை தயாரிக்க ஆர்வம் காட்டப்போவதாகவும் முடிவெடுத்துள்ளார் என்ற தகவல் வெளியானது. குழந்தைகளை பார்த்துக்கொள்ள சினிமாவில் இருந்து ஓய்வு பெறவும் முடிவெடுத்திருக்கிறாராம்.

விவாகரத்து
இந்நிலையில், பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வருவது விக்னேஷ் சிவனை திருமணம் செய்ததால் தான். அதனால் நயன் தாரா, விக்னேஷ் சிவன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதால் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளாராம். ஆனால் விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்த இரு மாதத்திலேயே விவாகரத்து வதந்தி செய்திகள் ஆரம்பித்துவிட்டன.
இது வெறும் வதந்திகளாகவே நயன் தாரா விசயம் மாறி வருவது சகஜமாகிவிட்டது என்று சினிமா விமர்சகர்களும் ரசிகர்களும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இது ஒரு பக்கம் மனைவி சிபாரிசு செய்த அஜித் படம் கைநழுவி போனதே என்று நினைத்து விக்னேஷ் சிவன் சமுகவலைத்தளத்தில் சோகமான மற்றும் மோடிவேஷன் செய்திகளை பதிவிட்டும் வருகிறார்.
You May Like this Video