மனைவிக்காக நடிகர் அல்லு அர்ஜுன் வாங்கி கொடுத்த பரிசு.. திருமண நாளில் சர்ப்ரைஸ்
பான் இந்தியன் ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது மனைவி அல்லு சினேகா ரெட்டி இருவரும் சமீபத்தில் 15வது திருமண நாளை கொண்டாடினார்கள். இந்நிலையில் அல்லு அர்ஜுன் திருமண நாளுக்கு மனைவிக்கு காஸ்ட்லியான பரிசு ஒன்றை கொடுத்து இருக்கிறார்.

Mercedes-AMG CLE 53 காரை தான் சுமார் ரூ. 1.5 கோடி கொடுத்து மனைவிக்கு பரிசாக அல்லு அர்ஜுன் கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Icon Star @alluarjun gifted a car to his wife #AlluSnehaReddy on the occasion of their 15th wedding anniversary.#CelebrityCouple pic.twitter.com/gn1xdLNQst
— greatandhra (@greatandhranews) March 7, 2026