எங்கடா புஷ்பாவ காணோம்! ஒருமணிநேரத்தில் அதிரவைத்த அல்லு அர்ஜுனின் வீடியோ..

tollywood pushpa alluarjun rashmikamanthana stylishactor
By Edward Dec 06, 2021 06:00 PM GMT
Report

தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஆக்டர் என்ற பெயரை பெற்றவர் அல்லு அர்ஜுன். நடனமாக இருந்தாலும் சரி சண்டை காட்சிகளானாலும் சரி ரசிகர்களை மிகவும் ஈர்த்து வருபவர்.

அப்படி அல்லு அர்ஜுன், நடிகை ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாக இருக்கும் புஷ்பா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மாலை 6 மணிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்த்த நிலையில் சில காரணங்களால் டிரைலர் வெளியாக தாமதானது.

தற்போது வெளியாகி 1 மணி நேரத்தில் 13 லட்சம் பார்வையாளர்களுக்கும் மேல் பெற்றுள்ளது. அதிலும் டிவிட்டர் பக்கத்தில் டிரெண்டிங் இடத்தினையும் பெற்று வருகிறது.