இரு நடிகர்களுக்கு இடையே நடிகையால் ஏற்பட்ட விரிசல்!!18 ஆண்டு ரகசியம்..
அல்லு அர்ஜுன் மற்றும் ராம் சரண்
தென்னிந்திய சினிமாவில் இன்று பிரமாண்ட வசூல் நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் தான் அல்லு அர்ஜுன் மற்றும் ராம் சரண். இவர்கள் நடித்த புஷ்பா மற்றும் ஆர் ஆர் ஆர் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது. இவ்விருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பது பலருக்கு தெரியாத ஒன்று தான்.
அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த், நடிகர் சிரஞ்சீவியின் மச்சான். அந்தவகையில் தான் அல்லு அர்ஜுன், ராம் சரண் இருவரும் உறவினர். இருந்தாலும் இவர்களுக்கு இடையே சுமூகமான உறவு இல்லை என்று நீண்டகாலமாகவே இருக்கிறது. இவர்களி விரிசலுக்கு காரணம் என்ன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நேஹா ஷர்மா
பல வருடங்களுக்கு முன் நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை நேஹா ஷர்மாவை விரும்பியதாகவும் அவரை திருமணம் செய்துகொள்ள நினைத்ததாகவும் கூறப்பட்டது. க்ரூக் படத்தின் மூலம் அறிமுகமான நேஹா ஷர்மா, தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்தப்போது அல்லு அர்ஜுனுடன் நெருக்கம் அதிகரித்திருக்கிறது.
ஆனால் இவர்களின் காதல் முக்கோணக்கதையாக மாறியது. 'சிறுதா' படத்தில் ராம் சரண் - நேஹா சர்மா இருவரும் நடித்து அறிமுகமாகினார். அப்போது இருவர் குறித்தும் காதல் வதந்திகள் பரவியதால் அல்லு அர்ஜுனுக்கு மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியது.
தன் காதலி எனக்கருதியவர், ராம் சரணுடன் உறவில் இருப்பது அல்லு அர்ஜுனுக்கு பெரும் துயரை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் இருவரும் தேனிலவுக்கு சென்றதாகவும் செய்திகள் பரவியது. இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வர, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அன்று முதல் அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டு கடந்த 18 ஆண்டுகளாக அல்லு அர்ஜுனும் ராம் சரணும் பேச்சுவார்த்தையே வைத்துக்கொள்ளவில்லையாம்.
ஆனால் நேஹா சர்மாவுடனாக வெளியாகிய செய்தி அனைத்தும் பொய் என்று கூறியிருக்கிறார் ராம் சரண். இதனால் என் மனைவி உபாசனாவுடன் விரிசலை ஏற்படுத்தும் என்றும் கூறியிருக்கிறார்.
தற்போது இருவரும் சந்தித்துக்கொண்டாலும் ஒரு நடிகையால் இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டது இன்றுவரை டோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்து வருகிறது.