வேறொரு நடிகருடன் ரொமான்ஸ்.. எனக்கும் கணவரும் சண்டை!! ஆலியா மானசா ஓபன் டாக்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரஜினி ராணி சீரியலுக்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்தனர்.
இந்த தொடரில் நடித்த நாயகன் சஞ்சீவும், நாயகி ஆலியா மானசாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியருக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேர்கணல் ஒன்றில் கலந்து கொண்ட பேசிய ஆலியா மானசா, "நான் சீரியலில் வேறு நடிகருடன் ரொமான்ஸ் மற்றும் நெருக்கமான காட்சிகளை நடித்ததை பார்த்து என் கணவர், 'என்ன பண்ணிக்கிட்டு இருக்க சீரியல்ல' என்று கேட்பார். அப்படியே ஒரு லுக் விடுவார். மற்ற கணவர் போல தான் என் கணவரும். அவருக்கும் பொசசிவ் இருக்கும்".
"இவரை போன்று கணவர் கிடைக்க நான் தான் அதிர்ஷட்சாலி. எனக்கும், என்னுடைய கணவருக்கும் இடையே சண்டை வருகிறது என்றால் நான் தான் தவறு செய்து இருப்பேன். 10 நிமிடம் கழித்து தான் அது எனக்கே தெரியும்" என்று ஆலியா மனசா தெரிவித்துள்ளார்.