கடைசியில் ஆல்யாவையே சீரியல்ல இருந்து தூக்கிட்டீங்களே! உண்மையை உடைத்த ராஜா ராணி சந்தியா..
பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி. முதல் சீசனில் சஞ்சீவ், ஆல்யா மானசா ஜோடியாக நடித்து அதன்பின் ரியல் ஜோடியாக திருமணம் செய்தனர்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் சீரியல்களில் நடித்து வந்த நிலையில் ஆல்யா ராஜா ராணி 2 சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது முறை கர்ப்பமாகினார்.
கர்ப்பகாலத்திலும் நடித்திருந்த ஆலியா குழந்தை பிறப்பதற்கு முன் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் ராஜா ராணி சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதில் தற்காலிக சந்தியாவாக நடிகை ரியா நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஆல்யா மீண்டும் திரும்புவார் என்று எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ரியா ஒரு ஷாக்கிங் செய்தியை கூறியுள்ளார். அதாவது ரசிகர் ஒருவர் தயவு செய்து ரெம்ரரின்னு சொல்லுங்க ஆல்யா தான் கரெக்ட்டா இருப்பாங்க என்று மெசேஜ் செய்திருந்தார்.
அதற்கு ரியா சாரி பர்மனெண்ட் என்று கருத்தினை கூறியுள்ளார். இதிலுந்து ஆல்யா இனிமேல் ராஜா ராணி 2வில் நடிக்க வாய்ப்பில்லை என்று தான் தெரிய வருகிறது.
அப்படியிருக்கையில் ஆரம்பத்தில் சந்தியாவாக ரியாவின் நடிப்பு ஏற்றுக்கொள்ளாமல் இருந்தவர்கள் தற்போது சிறப்பாக நடித்து வருவதால் ஆதரவான கருத்துக்களை கூறி வரவேற்று வருகிறார்கள்.
சமீபத்தில் ரியாவிடன் உங்களை எப்படி உசார் செய்வது என்று கூறுங்கள் என கேட்க சாரி பிரோ நான் ஆல்ரெடி கமிட்டெட் என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
