பேருக்கும் தான் கமல்ஹாசன் மகள்! புது அவரதாரத்தில் அக்ஷரா

kamalhasan shrutihaasan akshara haasan tamilactress
By Edward Mar 22, 2022 03:01 AM GMT
Report

நடிகர் கமல்ஹாசன் மகள்களாக ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் இருவரும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்கள். ஸ்ருதி முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்றதை போன்று அக்ஷரா ஹாசன் அதை பெற தவறவிட்டார். கடாரம் கொண்டான், விவேகம் போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரமே கிடைத்தது.

தற்போது இவரின் நடிப்பில் “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு” என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் மூலம் அக்ஷரா கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

வரும் 25ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்ஷரா ஹாசன் உடன் இணைந்து பிரபல பாடகி உஷா உதூப், மால்குடி சுபா, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் முழுக்க முழுக்க ஹீரோயினை சுற்றி தான் நடக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் சினிமாவில் நீண்ட காலம் ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வந்த அக்ஷராஹாசன் இந்த திரைப்படத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்குள் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.