ஊதி ஊதி வெறுப்பேற்றிய கணவர்.. பளார் விட்ட நடிகை அமலாபால்
Amala Paul
By Yathrika
அமலாபால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை அமலாபால். விஜய், விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் கடைசியாக மலையாளத்தில் ப்ருத்விராஜுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்ட அமலாபால், தற்போது கர்ப்பமாக உள்ளார்.
எல்லா நடிகைகளை போல இவரும் நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் அமலாபால் மற்றும் தேசாயின் ஒரு கியூட்டான வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது அமலாபால் சீரியஸாக பேசிக்கொண்டிருக்க அவரது கணவர் முடியை ஊதிக்கொண்டே இருக்கிறார்.
இதனால் கடுப்பான அமலாபால் அவரை பட் என அடிக்கிறார். இதோ அவர்களின் கியூட் வீடியோ,