கடைசியில் வாய்ப்பில்லாமல் சைக்கோவான நடிகை அமலா பால்! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Amala paul Tamilactress Myna
By Edward Oct 27, 2021 07:55 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். இதையடுத்து, மைனா படத்தின் மூலம் நல்ல இடத்தை பிடித்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தார். இயக்குனர் ஏ எல் விஜய்யை திருமணம் செய்து சில ஆண்டுகளிலே விவாகரத்து பெற்று பிரிந்தார்.

தற்போது படவாய்ப்புகள் ஓரளவிற்கு கிடைப்பதால் வெப் சீரிஸ் படங்களில் நடித்து கிளாமரில் எல்லை மீறி நடித்து வருகிறார். தற்போது ஆடை படத்தை தொடர்ந்து அமலாபால் சோலோ நாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று அமலாபாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியானது.

அனூப் எஸ் பானிக்கர் இயக்கும் இந்த படத்தை அமாலா பாலின் தயாரிப்பு நிறுவனமே தயாரித்து வெளியிடுகிறது. காடவர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இப்படத்தில் அமலா பால் ஒரு பாரன்ஸிக் சர்ஜனாக நடித்துள்ளாராம்.

இதற்காக ஒரு மருத்துவமனையில் ஒரு வாரம் அமலாபால் பயிற்சி எடுத்து படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. பர்ஸ்ட் லுக் என்றால் சாதாரணமாக அல்ல பிணங்களுக்கு நடுவே அமர்ந்து அமலாபால் உணவு உண்பது போல் இருந்துள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

Gallery