முன்னாள் காதலருடன் நெருக்கமாக இருந்த அமலா பால்.. புகைப்படத்தை லீக் செய்துவிடுவேன் என்று மிரட்டல்
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை அமலா பால். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே என்ன நடந்ததோ தெரியவில்லை. 2017ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டார்கள்.

இதன்பின் பவீந்தர் சிங் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. அதற்கு ஏற்றார் போல் இருவரும் முத்தம் கொடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் கூட வெளியானது. ஆனால், அது திருமணம் இல்லை, வேறு போட்டோஷூட் தான் என்று கூறி அமலா பால் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது பவீந்தர் சிங் அமலா பாலுக்கு பாலியில் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளதாக காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார் அமலா பால். அதுமட்டுமின்றி இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் லீக் செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளதாகவும் புகார் அளித்துள்ளார் அமலா பால்.

இந்த புகாரின் அடிப்படையில் தற்போது அமலா பால் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் பவீந்தர் சிங்கை ராஜஸ்தானில் வைத்து காவல் துறை கைது செய்துள்ளது.