வாய்ப்பில்லாமல் கடைசியில் இப்படியா பண்ணுவது.. அமலா பாலுக்கு வந்த சோதனை..
தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் மகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை அமலாபால். மலையாள நடிகையாக சிந்து சமவெளி என்ற சர்ச்சையான படத்தில் நடித்த அமலா பாலுக்கு மைனா படம் தேசிய விருது பெற்றதால் கொடிக்கட்டி பறந்தார்.
சினிமா வாய்ப்புகள்
குடும்ப பாங்கான நடிகை என்ற பெயரை எடுத்து வந்த அமலா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். அதன்பின் இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து சில கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
விவாகரத்துக்கு பின் மார்க்கெட் குறைந்து படவாய்ப்பு இல்லாமல் சொந்த ஊருக்கே சென்றுவிட்டார். நண்பர்களுடன் மது பார்ட்டி, புகை என்று ஜாலியாக இருந்து வந்த அமலாபால் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.
படம் ஓரளவு வரவேற்பு பெற்றாலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்படி ஒருசில வெப் தொடர்களில் நடிகர்களுடன் நெருக்கமாக படுக்கையறை காட்சியில் நடித்து ஷாக் கொடுத்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி
தற்போது கேடவர் படத்தில் நடித்து அதன் போஸ்டரையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஆரம்பிக்கப்பட்ட ராஜு வீட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்படி இந்த நிகழ்ச்சிக்கு பிறகு படவாய்ப்பில்லாத அமலா பாலை பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிரக்கவும் வாய்ப்புள்ளதா என்றும் கூறி வருகிறார்கள்.