குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலா பால்!! வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..

Amala Paul
By Edward Feb 19, 2023 01:30 PM GMT
Report

மலையாள வரவாக முதல் படத்திலேயே சர்ச்சையில் சிக்கிய அமலா பால், மைனா படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுத்தது. வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.

இடையில் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வந்தார். கிடைக்கும் நேரத்தில் நண்பர்களுடன் பார்ட்டி அவுட்டிங் என்று வந்த அமலா பால் வாய்ப்புகள் இல்லாமல் சிலகாலம் ஒதுங்கி இருந்தார்.

குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலா பால்!! வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்.. | Amala Paul Latest Swim Photos Post Viral

தற்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் கொடுத்து கிளாமரில் உச்சத்தை தொடும் அளவிற்கு மாறிவிட்டார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்டையும் பகிர்ந்து வருவார்.

தற்போது மகா சிவராத்திரியை முன்னிட்டு, நீரில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, என்னால் மாற்ற முடியாத ஏற்றுக்கொள்ளும் சக்தியை இந்த நீர் வழியாக வழங்குவாயா என்றும் ஆற்றலையும் தைரியத்தையும் என்னால் மாற்ற முடியும் என்ற நெருப்பு சக்தி வாயிலாகவும் காற்றின் சக்தி மூலம் வித்தியாசத்தை அறிந்து கொள்ளும் திறனையும் சக்தி வாய்ந்த பூமி வழியாக என் பாதையை அறிந்து நடக்கவும் ஆசீர் வழங்குங்கள் என்றூ கேட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கலாய்த்தபடி வர்ணித்து அமலா பாலின் பதிவிக்கு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.