திரையரங்கில் காதலனுடன் நடிகை அமலா பால்.. ஓரமாக அமர்ந்து முத்தம் கொடுத்த நடிகை
Amala Paul
By Karthick Raja
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் நடிப்பில் தற்போது கடாவர் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை அமலா பால் தயாரித்து நடித்துள்ளார்.
வித்தியாசனமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம், நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் டிவி நிகழ்ச்சியில் அமலா பால் கலந்துகொண்டு, தனது வாழக்கையில் நடந்த பல சுவாரஸ்யான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அதில் ஒன்றாக தனது காதலனுடன் டீனேஜ் வயதில் தனியாக திரையரங்கிற்கு சென்று படம் பார்த்ததாகவும். கார்னர் சீட்டில் அமர்ந்து படம் பார்க்கும் பொழுது காதலனுக்கு முத்தம் கொடுத்ததாகவும் அமலா பால் வெளிப்படையாக கூறியுள்ளார்.
மேலும், சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நடிகருடன் டேட்டிங் செய்ததாகவும் அமலா கூறியுள்ளார்.