வில்லன் நடிகர் வேண்டாம்!! ரகுவரனை ஒதுக்கி விவாகரத்து நடிகருக்கு 2ஆம் தாரமான நடிகை அமலா..
80-களில் கொடிக்கட்டி பறந்த டாப் நடிகைகளில் ஒருவர் நடிகை அமலா அக்கினேனி. மைதிலி என்னை காதலி படத்தின் மூலம் அறிமுகமாகிய அமலா, அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார். அதன்பின், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் கவனம் செலுத்தி நடித்து வந்த அமலா, சிலருடன் கிசுகிசுவில் சிக்கினார்.
அப்படி,1987 -ம் ஆண்டு அமலா மற்றும் ரகுவரன் நடிப்பில் கூட்டுப் புழுக்கள் என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது ரகுவரனுக்கு, அமலா மீது காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதலை அமலாவிடம் கூறியுள்ளார். ஆனால் இந்த காதலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இதனால் ரகுவரன் மிகுந்த வேதனை அடைந்தாராம்.
கடைசியில் அமலா 1992 -ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய அமலா தமிழில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து கணம் என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து நடிக்க ஆரம்பித்தார்.
தெலுங்கு, இந்தி மொழிகளில் கவனம் செலுத்தியும் இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் வருகிறார். மேலும், அமலாவின் கணவர் நடிகர் நாகார்ஜுனா இதற்கு முன்பு லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video