முகேஷ் அம்பானி வீட்டு புதிய கார்!! புல்லட் ஃப்ரூப்-க்கே இத்தனை கோடியில் கார்-ஆ...
முகேஷ் அம்பானி
பிரம்மாண்டத்திற்கு பேர் போன கோடிஸ்வரர்களிலேயே உலகம் வியந்து பார்க்ககூடியவர் தான் முகேஷ் அம்பானி. தன்னுடைய பிள்ளைகளின் திருமணத்தை உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு நடத்தி முடித்தார்.
அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா திருமணத்திற்கு பின், அவர்கள் பற்றிய சிறு செய்திகள் கூட வைரலாகி வருகிறது. அந்தவகையில், தங்கள் குடும்பத்திற்கென்று வைத்திருக்கும் ஆரம்பர கார் கலெக்ஷனில் ஒரு புதிய காரை சேர்த்துள்ளனர் அம்பானி குடும்பத்தினர்.
புல்லட் ப்ரூஃப் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்
இந்தமுறை அம்பானி குடும்பம் இந்தியாவிலேயே முதல் புல்லட் ப்ரூஃப் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கியுள்ளனர். ஏற்கனவே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்களை வைத்திருக்கும் அம்பானி குடும்பத்தினர் இந்த காரை வெறும் புல்லட் ப்ரூஃப் கண்ணாடி ஒன்றிற்காகவே வாங்கியிருக்கிறார்களாம்.
அதற்கு காரணம் பலமுறை அம்பானி குடும்பத்திற்கு கொலை மிரட்டல்கள் வரும் வேளையில் அதிகப்படியான பாதுகாப்பு அளிக்கப்படும். அப்படியான சமயத்தில் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி ஆகியோருக்கு Z+ ரக உயர் பாதுகாப்பு அளிக்கப்படும் என்பதால் அதற்காக தான் இந்த காரை வாங்கியிருக்கிறார் முகேஷ் அம்பானி.
இதன் பதிப்பு கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 7.99 கோடி ரூபாயாம்.