2 விவாகரத்து! நடிகை அம்பிகாவுக்கு வாய்ப்பில்லாமல் போக திருமணம் இல்லை இதுதான்.. பிரபல விமர்சகர்
தென்னிந்திய சினிமாவில் 70, 80களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர்களில் ஒருவர் நடிகை அம்பிகா. மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து கதாநாயகியான அம்பிகா தமிழில், சக்களத்தி என்ற படத்தில் அறிமுகமாகினார். அதன்பின் ரஜினி, கமல், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார்.
ஒருசில காலக்கட்டத்தில் அம்பிகா வாய்ப்பில்லாமல் இரண்டாம் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் 1988ல் பிரேம் குமார் மேனனை திருமணம் செய்து 8 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.
அதன்பின் 6 வருடங்களுக்கு பின் 2000 ஆம் ஆண்டு ரவிகாந்த் நடிகரை திருமணம் செய்து இரண்டே ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது தன் பிள்ளைகளுடன் வசித்து வரும் அம்பிகா சீரியல்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
அம்பிகா குறித்து சினிமா விமர்சகரும் டாக்டருமான காந்தராஜ் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் நடித்து வந்த அம்பிகா, காதல் பரிசு படத்தில் கிழவி போன்று காணப்பட்டார். வடிவேலு, அம்பிகாவுக்கு வாய்ப்பு தேடி கொடுக்கும் அளவிற்கு வளர்ந்தார்.
அந்த அளவிற்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. அம்பிகாவுக்கு சீக்கிரம் திருமணம் செய்ததால் வாய்ப்பு இல்லாமல் போகல. வாய்ப்பு போக அவர் வயதானவர் தோற்றத்தை காண்பித்து முகம் சுருக்கம் தான் காரணம்.
பிளாஸ்ட்டிக் சர்ஜெரி செய்ய சொன்னாங்க ஆனால் அம்பிகா அதை செய்யவில்லை. உச்சத்தில் இருக்கும் போது காதல் பரிசு படம் தியேட்டரில் போகும் கிழவி வந்துட்டா என்று ரசிகர்கள் கத்துவதை நான் கேட்டிருக்கிறேன் என்று காந்தராஜ் கூறியிருக்கிறார்.