செஞ்சிட்டா போச்சி? அடுத்த பிகில் ராயப்பனுக்கு உயிர் கொடுக்க போகும் அட்லீ..

Vijay Atlee Kumar
By Edward May 25, 2022 05:49 AM GMT
Report

இயக்குனர் சங்கரின் சிஷ்யப்பிள்ளையாக வளர்ந்து ராஜா ராணி என்ற ஹிட் படத்தினை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. இப்படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்ற படங்களை கொடுத்து விஜய்யின் புதிய மார்க்கெட்டை உருவாக்கினார் அட்லீ.

தற்போது பாலிவுட் பக்கம் சென்று ஷாருக்கானின் லயன் படத்தினை இயக்கி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கும் அட்லீ ஷாருக்கான் படமே அடுத்த கட்ட சினிமா வாழ்க்கைக்கு தூணாக அமையும் என்று நம்பி வருகிறார்.

இந்நிலையில் அமேசான் ஓடிடி தளம் டிவிட்டர் பக்கத்தில், நினைத்து பாருங்கள் பிகில் ராயப்பனை வைத்து கதையாக ஒரு படம் உருவாகினார் எப்படி இருக்கும் என்று என பதிவிட்டுள்ளனர்.

இதை பார்த்த அட்லீ செஞ்சிட்டா போச்சி என்று கருத்தினை தெரிவித்துள்ளார். அடுத்த பிகில் ராயப்பன் ரெடி என்று ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை கூறி டிரெண்ட்டாக்கி வருகிறார்கள்.