ரூ. 6 கூட ஸ்கூல் ஃபீஸ் கட்ட கஷ்டம்.. பேட்டியில் கண்ணீர் விட்டு கலங்கிய பிரபல நடிகர்..

Naga Chaitanya Bollywood Aamir Khan
By Edward Aug 09, 2022 08:30 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் உடலை வறுத்திக்கொண்டு கொடுத்த கதாபாத்திரமாகவே மாறி நடித்து மக்கள் மத்தியில் தீரா இடம் பிடித்தவர் தான் நடிகை ஆமிர் கான். சமீபத்தில் லால் சிங் சட்டா என்ற படத்தில் கரீனா கபூர் கானுடன் நடித்துள்ளார்.

ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம் தமிழிலும் ரிலீசாகவிருக்கிறது. அதன் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை சமீபத்தில் கலந்து கொண்டு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது, பள்ளி பருத்தில் நான் படித்த போது என் வீட்டில் பணக்கஷ்டம்.

6 ஆம் வகுப்புக்கு 6 ரூபாய் கட்டணம், 7 ஆம் வகுப்புக்கு 7 ரூபாய் கட்டணம், 8 ஆம் வகுப்புக்கு 8 ரூபாய் கட்டணமாக இருந்தது. அதைக்கூட எங்களால் கட்டமுடியாத சூழலில் நாங்கள் இருந்தோம்.

மூன்று சகோதர்களையும் அப்பா கஷ்டப்பட்டு வளர்த்ததாகவும், ஸ்கூல் ஃபீஸ் கட்டவில்லை என்றால் தலைமை ஆசிரியர் எச்சரித்தும் கட்டவில்லை. அதன்பின் எங்கள் பெயரை அனைவர் முன்நிலையிலும் அறிவிப்பார்.

இதை கூறும் போது கண்ணீர் விட்டு கலங்கியுள்ளார் ஆமிர் கான். தற்போது கோடியில் சம்பளம் வாங்கும் மூத்த நடிகராக பாலிவுட் சினிமாவை ஆட்டிபடைத்து வருகிறார்.