திருமணத்திற்கு பின் குட் நியூஸ் சொன்ன நடிகை பாவனி.. அவரே வெளியிட்ட புகைப்படம்
Pavani Reddy
By Kathick
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சந்தித்து கொண்டு, பின் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் அமீர் - பவானி. இவர்களுடைய திருமணம் இந்த ஆண்டு நடைபெற்றது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான துணிவு படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இதுமட்டுமின்றி இருவரும் இணைந்து புதிய படத்தில் நடித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், திருமணத்திற்கு பின் நடிகை பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். ஆம், அமீர் பாவனி இணைந்து புதிதாக வீடு ஒன்றை காட்டியுள்ளனர்.
அதனை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..