என்னய்யா கல்யாணமே செஞ்சி வச்சிட்டீங்களா.. திருமணத்தை முடித்த அமீர் - பாவ்னி!! வைரல் வீடியோ

Bigg Boss Star Vijay Pavani Reddy
By Edward Aug 11, 2022 03:42 AM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சி மூலம் காதல் ஜோடிகளாக உலா வந்தவர் அமீர் - பாவ்னி. அமீர் இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்தும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சிகளிலும் பல முறை பிரபோஸ் செய்து அதை ஏற்காமல் இருந்து வந்தார் பாவ்னி.

எல்லாமே யோசித்து தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அதற்காக முகூர்த்த நாள் பார்த்து வருவதாகவும் சமீபத்திய எபிசோட்டில் கூறியிருந்தார் பாவ்னி. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியே தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் திருமணத்தை முடித்துள்ளது.

பிபி ஜோடிகள் வரும் எபிசோட்டில் அமீர், பாவ்னியின் கழுத்தில் தாலியும் பொட்டும் வைத்து மனைவியாக ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பழம் மாதிரி அமைதியா இருந்துட்டு இப்படி ஒரு வேலைய பார்த்திருக்கு பாரு இந்த பாவ்னி என்று கலாய்த்து வருகிறார்கள். ஆனால் இது நிகழ்ச்சி நடனத்திற்காக செய்யப்பட்டது என்று கூறிவிடுவார்கள் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.