திருமணமாகாமல் 2 வயதில் ஆண் குழந்தை!! விவாகரத்துக்கு ரெடியான ரஜினிபட நடிகை

tamilactress amyjackson 2.o madarasapattinam hollywood actress
By Edward Jul 28, 2021 05:42 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யாவின் நடிப்பில் வெளியான படம் மதராசபட்டினம். அப்படத்திற்காக வெளிநாட்டு நடிகையாக எமி ஜாக்சனை இறக்கி நடிக்க வைத்தனர். கொடுத்த வாய்ப்பினை கச்சிதமாக முடித்து ரசிகர்களை ஈர்த்தார் எமி. இதையடுத்து தாண்டவம், எவடு, ஐ, கெத்து, தெறி, தேவி, தி வில்லன், 2.O போன்ற படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டிற்கு முன்பே ஆண்டு ஜார்ஜ் என்பவரை காதலித்து கர்ப்பமாகினார். திருமணத்திற்கு முன்பே லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து கர்ப்பமானதால் ஒரு ஆண் குழந்தையை எமி ஜாக்சன் பெற்றெடுத்தார். விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்த எமி ஜாக்சன் திடீரென தன்னுடைய காதலரை பிரேக்கப் செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தன காதலருடன் எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்து விட்டதாக கூடிய சீக்கிரம் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மகனுக்காக சினிமாவில் நடிக்காமல் இருந்த எமி ஜாக்சனின் தரப்பில் இதுபற்றி எந்த விவரமும் அளிக்கவில்லையாம்.