விஜய் படத்தை வேண்டாம் என ஒதுக்கிய நடிகர் ஆனந்த் பாபு.. அதுவும் இந்த நடிகர் நடித்த கதாபாத்திரமா!

vijay Poove Unakkaga nagesh anandbabu
By Edward Oct 05, 2021 06:11 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் ஆனந்த பாபு. நடிகர் நாகேஷ் அவர்களின் மகனாக சினிமாவில் டி ராஜேந்திரன் அறிமுகப்படுத்தி வைத்தார். இவரின் குடும்பமே கலைக்குடும்பம் என பெயர் எடுத்து நடிகர் நாகேஷின் மகனாக சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் முதன் முதலில் தங்கைக்கோர் கீதம் படத்தில் அறிமுகமானார். அப்படம் அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

அதனை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வந்த நிலையில் சேரன் பாண்டியன் படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்லதோர் பெயரை சம்பாரித்து கொடுத்து. சில வருடங்களுக்கு முன் உயிருக்கு போரடிய போது அவரின் பிள்ளைகள் நால்வரும் மருத்துவமனையில் சேர்த்து அவரை அரவணைத்தனர். தற்போது படங்களில் சிறுகதாபாத்திரங்களிலும், சின்னத்திரை சீரியலில் மெளனராகம் உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்து வந்தார்.

தற்போது சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகர் விஜய் நடித்து நல்ல வரவேற்பு பெற்ற பூவே உனக்காக படத்தில் நடிகர் முரளி நடித்த கெஸ்ட் ரோலில் நான் நடிக்க இருந்தது. விக்ரமன் இயக்கத்தில் இப்படத்தில் நடிக்க கெஸ்ட் ரோல் தான் கிடைத்ததா என சில காரணங்கள் ஏற்பட்டு அதை வேண்டாம் என கூறினேன்.

இது வேறு எந்தவொரு காரணமும் இல்லை என்று கூறியுள்ளார் ஆனந்த் பாபு. பின் நானும் காமெடி கதாபாத்திரங்களில் வடிவேலு ஆரம்பிக்கவுள்ள நேரத்தில் நடிக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.