அனந்த் அம்பானியின் வாட்ச் கலெக்ஷன்ஸ்!! இந்த ஒரு வாட்ச் மட்டும் இத்தனை கோடியாம்..
முகேஷ் அம்பானி
ஆசியாவின் நம்பர் பணக்காரர்களில் டாப் இடத்தில் இருப்பவர் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, அனந்த் அம்பானி என்ற மூன்று குழந்தைகள் பிறந்து, தற்போது மூவரும் திருமணமாகி, குடும்பத்தையும் பிசினஸையும் பார்த்து வருகிறார்.
தற்போது தன்னுடைய வாரிசுகளையும் தன் தொழிலில் ஈடுபடுத்தி, பல பொறுப்புகளை பார்க்க வைத்து வருகிறார். அம்பானி குடும்பம் என்றாலே பிரமாண்டத்திற்கு பேர் போனவர்கள் தான். அப்படி அவர்கள் வாங்கும் அனைத்தும் லட்சம் முதல் கோடி ரூபாய் வரை தான் இருக்கும்.
அனந்த் அம்பானியின் வாட்ச்
அந்தவகையில் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் வாட்ச் கலெக்ஷன் என்ன என்ன என்றும் அவை எத்தனை கோடி மதிப்பு என்ற தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Patek Philippe, Richard Mille, Vecheron Constantin உள்ளிட்ட பிராண்ட் வாட்ச்களை வைத்துள்ளார் அனந்த் அம்பானி. அதில், Patek Philippe Sky Moon White Gold Black வாட்ச் மட்டுமே சுமார் ரூ. 73 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.