புருஷன் இறந்தா ஏன் அந்த பெண் பொட்டு வைக்கக்கூடாது!! சடங்குக்கு எதிராக பேசிய நடிகை அனசுயா..

Gossip Today Indian Actress Pushpa 2: The Rule Actress
By Jai Aug 29, 2026 07:30 AM GMT
Report

அனசுயா பரத்வாஜ்

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன் பயணத்தை தொடங்கு இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை அனசுயா பரத்வாஜ்.

நாகர்ஜுனாவின் சொக்கடே சின்னி நயனா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகிய அனசுயா, க்ஷணம் என்ற படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றார். புஷ்மா மற்றும் புஷ்பா 2 படத்தில் மிரட்டலாக வில்லி ரோலிலும் நடித்திருப்பார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், கணவரை இழந்த கைம்பெண்கள் சடங்குகள், கட்டுப்பாடுகள் குறித்து பேசியுள்ளார்.

புருஷன் இறந்தா ஏன் அந்த பெண் பொட்டு வைக்கக்கூடாது!! சடங்குக்கு எதிராக பேசிய நடிகை அனசுயா.. | Anasuya Bharadwaj Questions Widowhood Customs

அதில், 3 ஆண்டுகளுக்கு முன் என் தந்தை இறந்துவிட்டார். அதன்பின் என் அம்மாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட கட்டாய மாற்றங்களை தான் இந்த கேள்வியை எனக்குள் ஏற்படுத்தியது. தன் தாய் தினமும் நெற்றியில் பொட்டு, கண்னில் மை, வண்ண வண்ண வளையல்கள், கொலுசு என்று அனைத்தையும் விரும்பி அணிந்து கொள்வார்.

அலங்கரித்துக் கொள்வது என் அம்மாவிற்கு பிடித்தமான ஒன்று, ஆனால் தந்தை இறப்பிற்குப்பின் அம்மாவிற்கு நடந்த சடங்குகளால் அவற்றை எல்லாம் அணிவதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பொட்டு, மை, வளையல், கொலுசு, மெஹந்தி, நெயில் பாலிஷ் என அழகியல் விஷயங்களை ஒரு பெண் திருமணத்திற்கு முன்பே தன் சிறு வயதிலேயே தாய், பாட்டியிடம் இருந்துதான் முதன்முதலில் கற்றுக்கொள்கிறாள். அப்படியிருக்கும் போது கணவரை இழந்தவுடன் இந்த ஆசைகளை எப்படி சமூதாயம் பார்க்கிறது.

புருஷன் இறந்தா ஏன் அந்த பெண் பொட்டு வைக்கக்கூடாது!! சடங்குக்கு எதிராக பேசிய நடிகை அனசுயா.. | Anasuya Bharadwaj Questions Widowhood Customs

பொட்டும், மையும் ஏன் கணவனின் வாழ்வோடு தொடர்புடையதாகவோ பார்க்கப்படுகிறது. கணவனை இழந்த பெண்கள் தங்களின் ஆடைகள், அலங்காரங்கள், சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் பல கட்டுப்பாடுகள் சந்தித்து வருகின்றனர்.

நான் எந்தவொரு மத நம்பிக்கையையோ, கலாச்சாரத்தையோ புண்படுத்துவதற்கு இந்த விஷயத்தை பற்றி பேசவில்லை. ஒரு பெண் பொட்டு வைப்பது, வளையல் அணிவது, மெஹந்தி வைப்பது என முழுக்க முழுக்க அப்பெண்ணின் தனிப்பட்ட விருப்பம், கணவன் மறைவிற்குப்பின் அப்பெண் என்ன செய்ய வேண்டும் என்று இந்த சமூகம் தீர்மானிக்கக்கூடாது என்று அனுசுயா பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.