மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் லியோ பட போஸ்டர் .. எகிறும் கண்டனம்

Vijay Anbumani Ramadoss Actors Tamil Actors Leo
By Dhiviyarajan Jun 17, 2023 05:24 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் லியோ திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

மேற்று (16-06-2024) லியோ படத்தின் முதல் பாடல் அறிவிப்பு போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். அந்த போஸ்டரில் விஜய் சிகரெட் பிடித்துள்ளார்.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் லியோ பட போஸ்டர் .. எகிறும் கண்டனம் | Anbumani Ramadoss Tweet Against Vijay Leo Poster

பிரபல நடிகராக இருக்கும் விஜய் சிகரெட் பிடித்தால் இளைய தலைமுறையை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்! லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது.

நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு.

சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளியான போது இதே போன்ற சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.