விஜே அர்ச்சனாவிற்கு என்ன ஆனது! மகள் சாரா வெளியிட்ட பதிவு! இதுதானாம்!
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் அர்ச்சனா. பிரபலங்களின் பேட்டி, ரியாலிட்டி ஷோ என தொகுத்து வழங்கிய அர்ச்சனா ஜீ நிறுவனத்துடன் சில பிரச்சனையால் விஜே வாய்ப்பினை இழந்தார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில வெறுப்பு சம்பவங்களை சந்தித்தார்.
பின் இணையத்தில் அவருக்கென ஹேட்டர்ஸ்களின் விமர்சனங்களையும் காதில் போட்டு கொள்ளவில்லை. இதையடுத்து மகள் சாராவுடன் யுடியூப் சேனல் ஆரம்பித்து பாத்ரூம் டூர் வீடியோவை வெளியிட்டார். சில தினங்களுக்கு முன் தனக்கு மண்டையில் சில சிகிச்சை செய்ய இருப்பதால் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தோடு தெரிவித்தார்.
தற்போது அம்மா உடல்நிலை சரியாகியுள்ளது, நார்மல் வார்ட்டிற்கு சென்றுவிட்டார் நலமாகவுள்ளார். சீக்கிரம் முழுவதுமாக நலம்பெற அவருக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் கூறி பதிவிட்டுள்ளார் அர்ச்சனாவின் மகள் சாரா.