முகம் சுருங்கி பாட்டி மாதிரியான தொகுப்பாளினி டிடி!! கலாய்க்கும் நெட்டிசன்கள்
சின்னத்திரை தொலைக்காட்சி சேனலில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. சின்னத்திரை சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் நடிக்க ஆரம்பித்து பின் விஜய் தொலைக்காட்சியில் காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறார்.

இந்தியாவை சேர்ந்த பல நட்சத்திரங்களை தன் பாணியில் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2014ல் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட டிடி, கருத்து வேறுபாடு காரணமாக அவரை 2017ல் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
அதன்பின் தனிமையில் இருந்து பேராசிரியர் பணியையும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். டிடி-க்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருக்கிறார்களாம்.

நடன இயக்குனர் சதீஷுடன் நெருக்கமாக இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் டிடி கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் கசிந்துள்ளது.
இந்நிலையில் 39 வயதை எட்டிய டிடி முகம் சுருங்கிய படி மாறிப்போனதை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். பொங்கலன்று பதிவிட்ட கிளோசப் புகைப்படத்தை பார்த்து வயதான பாட்டியாகிட்டீங்க என்று கேலி செய்தும் வருகிறார்கள்.