மதமா அப்படினா என்ன, செம கெத்து காட்டும் தொகுப்பாளினி மணிமேகலை கணவர்
Tamil TV Shows
By Yathrika
மணிமேகலை
காதலுக்கு கண் இல்லை என்ற வசனத்தை நிறைய படங்களில் தான் நாம் பார்த்திருப்போம். அதை நிஜத்தில் செய்துகாட்டி கெத்து காட்டியவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை.
தொலைக்காட்சியில் ஒரு பாடலில் நாயகன் பின்னால் நடனம் ஆடியவரை பார்த்து பிடித்து போய் அவர் யார் என்ற விவரம் அறிந்து அவரை சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தியவர் தான் மணிமேகலை.

வீட்டில் மதம் பார்த்து திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் காதலனை அவர்களை எதிர்த்து கரம் பிடித்தார்.
மதம் எல்லாம் எங்களின் காதலுக்கு அப்பாற்பட்டது என நிரூபித்து வருகிறார்கள். மணிமேகலை பக்ரித் கொண்டாடுவதும் ஹுசைன் தற்போது சபரிமலைக்கு மாலை போடுவதும் என ஒரு உதாரணமாக உள்ளார்கள்.
சபரிமலைக்கு மாலை போட்ட புகைப்படத்தை மணிமேகலை வெளியிட ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.
