விஜய்க்கு அசிங்கம், அவமானமே அவர் ரசிகர்கள் தான்!! காட்டமாக பேசிய பிரபலம்..வீடியோ..
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த கரூர் பிரச்சார பரப்புரை கூட்டத்தின் போது சம்பவ இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுகுறித்து விஜய் மீது ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சி உள்ளிட்ட பல கட்சியின் தலைவர்கள் கண்டனங்களை முன் வைத்து வருகிறார்கள். தற்போது பிக்பாஸ் பிரபலமும் யூடியூப்பருமான ஜிபி முத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஜிபி முத்து
அதில், இழப்பீடு கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் அதை வாங்கியப்பின் அதை வெளிப்படுத்தும் விதம் மிகவும் கேவலமாக உள்ளது. ஒருவர் சொல்கிறார், என் இரு குழந்தைகள் செத்தாலும் பரவாயில்லை என்று, எனக்கு பதறுகிறது. 20 லட்சம் தான் அவர்களுக்கு பெரிதாக தெரிகிறது, குழந்தையை இழந்த வருத்தம் அவர்களிடத்தில் இல்லை. பெற்றப்பிள்ளையை விட எத்தனை லட்சங்களும் கோடிகளும் வந்தாலும் அது ஈடாகிவிடுமா?.
தம்பியை இழந்தவர், விஜய் சாருக்காக என் தம்பி உயிரைக்கொடுத்துள்ளான், அது தவறு கிடையாது, நானும் உயிரைக்கொடுப்பேன் என்று கூறுகிறார். இந்த பேச்சுக்களை விஜய் சார் கேட்டால் கூட கண்டிப்பார். ஒரு குடும்பத்தினரே சொல்கிறார்கள், எங்கள் குழந்தை இறந்ததால் தான் நாங்கள் விஜய்யை அருகில் இருந்து பார்த்தோம், பரவாயில்லை என்று கூறுகிறார்கள்.

இப்படி சொல்ல வெட்கமா இல்லையா?. 41 பேர் உயிர் போய்விட்டதே என்று கஷ்டப்பட்டவர்கள் முகத்தில் சாணியை கரைத்து ஊற்றுவது போல் உள்ளது. உங்களுக்கு காசு, பணம் தான் முக்கியம் என்றால் வாங்கிக்கொள்ளுங்கள், இப்படி தரம்கெட்டு பேட்டிகளை கொடுக்காதீர்கள். இப்படி பேசுபவர்களை பார்க்கும் போது முகத்தில் உமிழும்போல உள்ளது. இப்படி இறந்தவர்களி உயிரை கேவலமாக மாற்றாதீர்கள், பணத்தையும் உயிரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள் என்று காட்டமாக பேசியிருக்கிறார் ஜிபி முத்து.
இப்படி பேசியதற்கு விஜய் ரசிகர்கள் பலரும் ஜிபி முத்துவையும் அவரது குடும்பத்தினரையும் கண்டபடி பேசி கமெண்ட் செய்துள்ளனர். இதை கண்டித்து மீண்டும் ஜிபி முத்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
விஜய்க்கு அசிங்கம் ரசிகர்கள்
விஜய்க்கு அவப்பெயரே அவரது ரசிகர்கள் தான், நான் என்ன சொல்லியிருந்தேன், பணத்தையும் உயிரையும் ஒன்றாக ஒப்பிடாதீர்கள் என்றுதான் சொன்னேன். பணம் தான் பெரியது என்பது போல பேட்டி கொடுக்க வேண்டாம்.
விஜய் ரசிகர்கள் என்னையும் எனது குடும்பத்தையும் அசிங்கமாக திட்டுறாங்க, விஜய்க்கு அவமானமும் அசிங்கமும் அவரது ரசிகர்களால் தான் ஏற்படுகிறது. இப்படி எல்லாம் பேசுவதால்தான் அவர்களை பலரும் தற்குறி என்று சொல்கிறார்கள் என்று மிகவும் காட்டமாக பேசியிருக்கிறார் ஜிபி முத்து.
நேத்து விடியோவில உயிருக்கு விலை பேசாதீங்கனு சொல்லி இருந்தாரு; இவரை போயி விஜய் ரசிகர்கள் கடிச்சி இருக்கனுங்க தற்குறிஸ் 🤦🏽♀️🤦🏽♀️
— நந்தினி ❣️ (@Nandhini1360381) October 23, 2025
காஷ்மீர்ல 27உயிர்கள் போனதுக்கே நாடே கவலைப்பட்டுச்சி அது மாதிரி இந்த கரூர் சம்பவமும்🥲
இருந்தாலும் தற்குறிஸ் அறிவு வராது https://t.co/fmCO3K2l9g pic.twitter.com/hwa0UYPpjw