நமீதாவுடன் அந்த காட்சி!! சரத்குமாரை மேடையில் அசிங்கப்படுத்திய தொகுப்பாளினி..
90ஸ் காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தினை பிடித்து தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சரத்குமார். அவரின் மகள் வரலட்சுமி நடித்த கொன்றால் பாவம் என்ற படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
அப்போது சரத்குமாரை வரவேற்ற தொகுப்பாளினி கவிதா, நக்மா முதல் நமீதாவை அன்பால் நனைத்த என்று ஆரம்பித்து கலாய்த்தபடி கூறியிருக்கிறார்.
இதன்பின் பேசிய சரத்குமார், நக்மா, நமீதா மட்டும் கூறிவிட்டு மற்ற நடிகைகளை கூறாமல் இருந்தால் கோச்சிக்க போறாங்க என்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியை கொடுத்த கவிதாவுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய கவீதா, சரத்குமாரின் பாடல் அப்படி என்றும் நமீதாவுடன் அந்த பாடலுக்கு ஆடியது எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள், அதனால் தான் அப்படி கூறினேன் என்று பகிர்ந்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
அதன்பின் நிகழ்ச்சி முடிந்த பின் அவங்களை பார்த்துக்கொள்கிறேன் என்று கவிதாவை மறைமுகமாகவும் மிரட்டியிருக்கிறார் சரத்குமார்.