விருதோடு ஆடை மாற்றும் வீடியோவை வெளியிட்ட டிடி.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகிய ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பால் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
திருமணம் - விவாகரத்து
அதில் குறிப்பாக காஃப் வித் டிடி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பெரியளவில் பிரபலமானது. சினிமா நட்சத்திரங்களை தன் தனித்துவமாக பேச்சால் நிகழ்ச்சியை அழகாக எடுத்து சென்றார். இவரது அக்கா பிரியதர்ஷினியும் விஜேவாகவும் சீரியல் நடிகையாக பணியாற்றியவர். 20 ஆண்டுகளுக்கும் மேல் டிடி தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் வெள்ளித்திரை படங்களிலும் நடித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு டிடி ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட டிடி 3 வருட வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட 2017ல் விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் நடிகர்களுடன் நெருக்கம் பார்ட்டி என்று ஜாலியாக இருந்து வருகிறார்.
மேலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்தும் வருகிறார். 38 வயதாகிய டிடி தற்போது ஆடையை மாற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார். JFW ACHIEVER’S AWARD 2022-ற்கான விருதினை வாங்கியுள்ள டிடி வெறும் டி-சர்ட் அணிந்து விருதினை ஏந்தியபடி மாற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பலர் கலாய்த்தும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.