கெனிஷாவுக்காக அப்பாவை ஒதுக்குகிறாரா ரவி மோகன்!! பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்..
ரவி மோகன்
நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தப்பின் கெனிஷா என்ற பாடகியுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இதனையடுத்து பல நிகழ்ச்சிகளில் கெனிஷாவுடன் ரவி மோகன் ஜோடியாக கலந்து வருகிறார்கள்.
தற்போது ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ப்ரோ கோட், தி ஆர்டினரி மேன் போன்ற படங்களில் நடித்தும் தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் அளித்த பேட்டியொன்றில் ரவி மோகன் பற்றிய சில விஷயத்தை பகிரிந்துள்ளார்.
அப்பாவை ஒதுக்குகிறாரா
அதில், ரவி மோகனின் தந்தை தமிழ் சினிமாவில் மிகப்புகழ்பெற்ற எடிட்டர். சினிமாத்துறையில் எடிட்டர் மோகன் என்றால் யாருக்கும் தெரியாமல் இருக்கமுடியாது. அந்தளவுக்கு சீனியர் எடிட்டர்.
அப்படி இருக்கும்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை உடனே குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் தற்போது அவர் நலமாகவுள்ளார்.

எடிட்டர் மோகனுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் ரவி மோகன் சிங்க்ப்பூரில் இருந்துள்ளார். உடன் கெனிஷாவுடம் இருக்கிறார். இருவரும் ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக பணம் திரட்டும் வேலைகளில் இருப்பதால் உடனே கிளம்பி சென்னை வர முடியவில்லை
எடிட்டர் மோகன் ஒன்றை மட்டும் தெளிவாக கூறியிருக்கிறார். அதாவது என்னை பார்க்க வருவதென்றால் ரவியை மட்டும் தனியாக வரச்சொல்லியுள்ளாராம். கெனிஷாவை அழைத்து வரவேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
அதேபோல் சில வாரங்களுக்கு முன் ரவி மோகனின் அக்கா பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடந்தபோதும் கெனிஷாவை அழைத்து வரவேண்டாம் என்று கூறியிருக்கிறார்களாம். இதனால் ரவி மோகன் தனது அக்கா மகளின் நிச்சயதார்த்தத்திற்கு செல்லவில்லை என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.