கட்டாயப்படுத்தி நிர்வாணமாக நடிக்க வைத்தார்களா? பயத்தில் நடித்து கொடுத்த ஆண்ட்ரியா

Andrea Jeremiah
By Edward Apr 29, 2022 04:13 AM GMT
Report

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். தற்போது கூட இவர் பிசாசு 2 படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் ஆண்ட்ரியா ஒரு பேட்டியில் தன் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சியகரமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

அதில் தனக்கு வாழ்க்கையில் நடந்த மிகப்பெரும் கொடுமை ஒன்றை கூறியது எல்லோருக்கும் ஷாக் தான். சில வருடங்களுக்கு முன் ஒருவரால் தனது வாழ்க்கை சீரழிந்து விட்டதாகவும், அதனால் உடல் ரீதியாக மற்றும், மன ரீதியாகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதன்பின் படங்களில் நடிக்க அதுவும் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க முடிவெடுத்தார். அதன் பலனாக இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 வாய்ப்பு கிடைத்தது.

படத்தில் சுமார் 15 நிமிடங்கள் நிர்வாணமாக நடிக்க வேண்டியதாக இருந்தது. முன்பே இதுபற்றி கூறியதும் என்னால் முடியாது என்று விலக நினைத்தேன்.

ஆனால் இயக்குனர் கட்டாயப்படுத்தி என்னை அப்படி நடிக்க வைத்தார். கதை நன்றாக இருந்ததால் நானும் பயந்து நடித்து கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.