18 வயசுல தான் எனக்கு அது கிடைச்சது.. உருக்கமாக பேசிய நடிகை ஆண்ட்ரியா

Andrea Jeremiah Indian Actress
By Edward Sep 14, 2022 07:00 PM GMT
Report

தமிழில் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் நடிகையாகி மற்றும் அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கிய என்ற பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகியவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா.

அதன்பின் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, அரண்மனை, தரமணி, அவள். விஷ்பரூபம் 2, வட சென்னை போன்ற வெற்றிப்படங்களில் நடித்தும் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியும் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

சமீபத்தில் நடிகர் விஜய்யின் மாஸ்டர், அரண்மனை 3 படத்திற்கு பின் பிசாசு, க, மாளிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் வருகிறார்.

இசை கச்சேரிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை கவனம் செலுத்தியும் க்ளாமர் போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் பனியன் அணிந்தபடி ரசிகர்களை மயக்கும் வண்ணம் பார்த்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு 18 வயதில் தான் என் தந்தை எனக்கு பியானோ வாங்கி கொடுத்தார் என்றும் அதற்கு முன் என் தோழிவீட்டுக்கு சென்று தான் பயின்று வந்தேன். ஆனால் பியானோ வந்ததும் அதில் அப்படியே இருந்ததாகவும் தற்போது என் வீட்டில் இருப்பது பெருமையாக இருக்கிறது என்றும் உருக்கமாக கூறியுள்ளார்.

GalleryGalleryGalleryGallery