அப்பா முன்பே டி-சர்ட்டில் கைவிட்ட மர்மநபர்.. பஸ்சில் நடந்த உண்மை சம்பவத்தை உடைத்த நடிகை ஆண்ட்ரியா...

Andrea Jeremiah Gossip Today
By Edward Nov 15, 2022 11:08 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக கேரியரை ஆரம்பித்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா போன்ற படங்கள் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இதன்பின், தமிழ், மலையாளம் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாகினார்.

தரமணி, விஷ்வரூபம் 2, வட சென்னை, மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து வந்தார். இடையில் பாடல் கச்சேரிகளில் பாடியும் வந்த ஆண்ட்ரியா அனல் மேலே பனித்துளி என்ற படத்தில் நடித்துள்ளார்.

வரும் 18 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தார். அப்போது ஒரு பேட்டியில், 11 வயது இருக்கும் போது பேருந்தில் நான் பயணம் செய்தேன்.

அப்போது என் பின் புறம் யாரோ கையை உறசுவது போலவும் பின் ஒரு கை என் டி சர்ட்டுக்குள் நுழைப்பது போல் உணர்ந்து சற்று முன்னே பஸ்ஸில் சென்றுவிட்டேன். அந்த அனுபவத்தை தொடர்ந்து இன்னொரு முறையும் நடந்தது.

அதன்பின் பஸ்சில் பயணிப்பதையே நிறுத்தி விட்டேன். அதற்கான வசதி என்னிடம் வந்ததால் நான் பேருந்தில் செல்லவில்லை. இப்படி சாதாரண பெண்களுக்கும் இதுபோன்று நடப்பதை தான் அனல் மேல் பனித்துளி படத்தில் காட்டியிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.