17 வயசான அஜித்தின் ரீல் மகள் அனிகாவா இது? இப்படியொரு போஸ்-ல் புகைப்படம்
நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள குட்டிப்பெண்ணாக அறிமுகமாகி நடித்து நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட படங்களிலும் சில மலையாள படங்களிலும் நடித்து வந்தார்.
மீண்டும் அஜித் மற்றும் நயன் தாராவின் ரீல் மகளாக விசுவாசம் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் சிறப்பான நடிப்பை கொடுத்து நல்ல வரவேற்பு பெற்றார். இதன்பின் போட்டோஷூட் பக்கம் தன் 15வது வயதில் ஆரம்பித்தார்.
இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் மாறி க்ளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வாய்ப்பிளக்க வைத்துள்ளது.
தற்போது 17 வயதாகும் அனிகா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் எடுத்த செல்ஃபி இணையத்தில் வைரலாக்கி வருகிறது.