நயன்தாராவுக்கே டஃப் கொடுக்க போகும் அஜித் ரீல் மகள்!! 18 வயதில் நடிகையானது இப்படியா!!
நடிகர் அஜித் குமார், திரிஷா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் என்னை அறிந்தால். இப்படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து மக்கள் மத்தியில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன்.
இப்படத்திற்கு பிறகு தமிழ், மலையாள மொழிகளில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா மீண்டும் அஜித் - நயன் தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் படத்தின் சிறப்பாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
அதன்பின் 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை ஈர்த்து வந்தார். போகபோக கிளாமர் பக்கம் சென்ற அனிகா 17 வயதில் உச்சத்தை தொடும் அளவிற்கு கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
தற்போது 18 வயதாவதற்கு முன்பே கதாநாயகியாக மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
விரைவில் அவர் நடிப்பில் புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்கள் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நயன் தாராவை அச்சு அசலான லுக்கில் மாறி க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.








