என்னுடைய மார்பிங் லீக் வீடியோவால் Mummyக்கு! அஜித் ரீல்மகள் அனிகா ஓப்பன் டாக்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முழு அப்டேட் இன்னும் உறுதியாக வராததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் கடுப்பாகி வருகிறார்கள்.
சமீபத்தில் என்னை அறிந்தால், விசுவாசம், நேர்கொண்ட பார்வை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் விசுவாசம் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. அதில் அஜித் - நயன் தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா. அப்படத்தின்மூலம் நல்ல வரவேற்பை பெற்ற அனிகா 15 வயதிலேயே இளம் நடிகைகளுக்கு இணையாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
இணையத்தில் அதிகம் தேடப்பட பிரபலமாக இருந்த அனிகா, சமீபத்தில் தன்னுடைய முகத்தை போன்று இளம்பெண் மார்பிங் செய்து படுகேவளமாக நடமாடிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது நானில்லை என்று அழுது வீடியோவையும் வெளியிட்டார். இந்த வீடியோவால் அனிகா சில நாட்கள் இணையதளத்தை ஒதுக்கி வைத்தார். தற்போது மார்பிங் வீடியோவால் தனக்கு என்ன நடந்தது என்று பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவை பாத்து அம்மாவுக்கு நிறைய கால் வந்துச்சு என்று நெகிழ்ச்சியுடன் கண்கலங்கியபடி பதிலளித்துள்ளார் அனிகா. இதுபோன்று யாரையும் இப்படி செய்யவேண்டாம் என்று ரசிகர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.