இந்த வயதில் இப்படியொரு ஷார்ட் ஸ்கிட்! அஜித்த்தின் ரீல் மகளை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

ajith anikha viswasam child artist
By Edward Oct 20, 2021 12:00 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் பலர் அறிமுகமாகி தற்போது இளம் நடிகைகளுக்கு போட்டிபோடும் விதமாக போட்டோஷூட் எடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார்கள். அந்தவரிசையில் மலையாள குழந்தை சுட்டியாக அறிமுகமாகி தமிழில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவிற்கு மகளாக நடித்து அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்.

இதையடுத்து நடிகர் ஜெயம் ரவியின் மிருதன், நானும் ரெளடி தான் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். மீண்டும் நடிகர் அஜித் மற்றும் நயன் தாரா இணைந்து நடித்து பெரியளவில் ஹிட் கொடுத்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து பல ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். விசுவாசம் படம் கொடுத்த நல்ல வெற்றியால் போட்டோஷூட் பக்கம் சென்று பேசப்படும் குழந்தை நட்சத்திரம் என பேரும் வாங்கினார்.

தற்போது மாமனிதன் என்ற தமிழ் படத்தில் நடித்தும், தெலுங்கு படத்தில் 16 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிகா தற்போது ஷார்ட் ஸ்கிட் அணிந்து ரசிகர்களை மிரளவைத்துள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.