1 லட்சத்தில் அந்த செருப்பை வாங்க ஆசை!! வாய்ப்பிளக்க வைத்த 19 வயது நடிகை அனிகா..

Anikha Surendran Tamil Actress Actress
By Edward Jun 06, 2024 05:29 AM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அனிகா, தமிழிலும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, போகப்போக கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார்.

1 லட்சத்தில் அந்த செருப்பை வாங்க ஆசை!! வாய்ப்பிளக்க வைத்த 19 வயது நடிகை அனிகா.. | Anikha Surendran About Expensive Heels

17 வயதில் புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு படுக்கையறை காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். சமீபத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்த பிடி சார் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனுஷ் இயக்கியிருக்கும் ராயன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மும்பையில் ஒரு செருப்பை பார்த்ததாகவும் அது என்னை மிகவும் கவர்ந்ததாகவும் கூறினார். 6 இன்ச் ஹீல்ஸ் கொண்ட அந்த செருப்பின் மீது தீராத ஆசை இருக்கிறது.

ஆனால் அந்த செருப்பின் விலை 1 லட்சம் ரூபாய். எப்படியாவது பணத்தை சேர்த்து வைத்து அதை வாங்கிவிட வேண்டும் என்று முயற்சியில் பணத்தை சேமித்து வருகிறேன் என்று அனிகா கூறியிருக்கிறார்.

இதனை கேட்ட ரசிகர்கள் ஒரு லட்சத்துக்கு செருப்பா? என்று கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு அனிகா அளித்த பேட்டியில் இந்த விஷயத்தை கூறியதை அடுத்து அந்த செருப்பை அவர் வாங்கினாரா என்று ரசிகர்கள் அவரின் புகைப்படத்தை ஆராய்ந்து வருகிறார்கள்.