எல்லோ சுடிதாரில் மயக்கும் 17 வயது அஜித் மகள்.. அனிகா வெளியிட்ட தீபாவளி ஸ்பெஷல் பிக்...
நடிகர் அஜித் குமார் திரிஷா ஜோடியாக நடித்த படம் என்னை அறிந்தால். இப்படத்தில் இருவருக்கும் மகளாக நடித்து தமிழில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன். 3 வயதில் சோட்ட மும்பை என்ற படத்தின் மூலம் மலையாள குட்டியான இருந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் அனிகா.
என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு மிருதன், தி கிரேட் ஃபாதர், பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் மீண்டும் அஜித் குமார், நயன் தாரா நடித்து சூப்பர் பிளாக்பஸ்டர் படமாகிய விசுவாசம் படத்தில் அவர்களின் மகளாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
குட்டி நயன்தாரா லுக்கில் இருக்கிறாரே என்று ரசிகர்கள் புகழும் வண்ணம் தற்போது 17 வயதில் கதாநாயகியாக புட்ட பொம்மா என்ற தெலுங்கு படத்திலும் லவ் ஃபுல்லி யுவர்ஸ் வேதா என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
தீபாவளி ஸ்பெஷல் புகைப்படமாக எல்லோ சுடிதாரில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

